• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தளபதி 66 – தெலுங்கு படமா?

தளபதி 66 படத்தை தெலுங்கு முன்னணி டைரக்டரான வம்சி பைடபள்ளி இயக்குகிறார். தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க போவது உறுதியாகி உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்பட உள்ளதாகவும், இந்த படத்தின் மூலம் விஜய் டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்க போவதாக சொல்லப்பட்டது. விரைவில் இப்படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய், பீஸ்ட் ப்ரொமோஷனுக்காக சன் டிவியில் பேட்டி அளித்துள்ளார். அதில், நெல்சன் விஜய்யிடம், நீங்கள் அடுத்து நடிக்கும் தளபதி 66 தெலுங்கு படமா என கேட்டார். இதற்கு பதிலளித்த விஜய், இது தமிழ் படம் தான். வழக்கமான மற்ற படங்களைப் போல் தமிழில் எடுத்து தெலுங்கில் டப் செய்ய போகிறார்கள், என்றார்.