நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படம் நாளை மறுநாள் (ஏப்ரல் 13) ரிலீஸாகவிருக்கிறது. பீஸ்ட் படத்தை முதல் நாளே பார்த்துவிடும் ஆசையில் பலரும் டிக்கெட் எடுத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் திருப்பூரில் செயல்பட்டு வரும் KNITBRAIN என்ற தனியார் நிறுவனம் ஒன்று, தனது ஊழியர்களுக்கு பீஸ்ட் படத்தை பார்க்க விடுமுறை அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் ஊழியர்கள் பலரும் பீஸ்ட் படத்தை முதல் நாளே பார்த்தாக வேண்டும் என்று டிக்கெட் எடுத்திருக்கிறார்கள். இதையடுத்து பீஸ்ட் படம் பார்க்க அவர்களுக்கு அரைநாள் விடுமுறை வழங்கி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்று பீஸ்ட் படம் பார்ப்பதற்காக தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 30 ஊழியர்களுக்கு அரைநாள் விடுமுறை வழங்கி உள்ளது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு டிக்கெட்டும் புக் பண்ணி கொடுத்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.