தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘டிமான்டி காலனி’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் அருள்நிதி, ரமேஷ், திலக் சனத் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த திரைப்படம் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அஜய் ஞானமுத்து அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு அஜய் ஞானமுத்து வ நயன்தாராவை வைத்து ‘இமைக்காநொடிகள்’ என்ற படத்தை இயக்கினார்.
அதனைத் தொடர்ந்து விக்ரமின் கோப்ரா என்று பல படங்கள் கிடைத்தது. இந்நிலையில் டிமான்டி காலனி திரைப்படம் வெளியான மே 22 ஆம் தேதி இரண்டாம் பாகமான டிமான்டி காலனி 2 படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க அவரது துணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார். இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.