• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

படப்பிடிப்பை முடித்து சென்னை வந்தார் நடிகர் விஜய்…

Byகாயத்ரி

May 25, 2022

நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் புது திரைப்படமானது இப்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. விஜய்க்கு நீண்டநாட்கள் கழித்து குடும்பக் கதையாக இந்த படம் அமைந்து இருக்கிறது. இதன் காரணமாக குடும்பத்தினரோடு தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் விதமாக எடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் ஐதராபாத்திலிருந்து சென்னை வந்தடைந்தார். இதையடுத்து சிறிது ஓய்விற்கு பின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையில் நேற்று முன்தினம் “தளபதி 66” திரைப்படத்தில் பங்கேற்றதாக பிரகாஷ் ராஜ், விஜய்யுடன் தான் செல்பி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். பிரகாஷ்ராஜ்க்கு இப்படத்தில் முக்கியமான வேடம் கொடுக்கப்பட்டும் இருக்கிறது.