

கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலையத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது மனு அளிக்க வரும் பொது மக்களை சரியான முறையில் காவலர்கள் நடத்துகின்றார்களா, காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் சரியான முறையில் இயங்குகிறதா, கைதிகள் அறையில் அனைத்து வசதிகளும் உள்ளதா என்பது குறித்தும்,
மேலும், பதிவு செய்யப்பட்ட வழக்குகள் முறையாக பராமரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறதா, காவலர்கள் பணி நேரத்தில் காவல் நிலையத்தில் இருந்தார்களா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

