• Sat. Jun 10th, 2023

பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனை நிலத்தை சமப்படுத்த அரசு அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி பணம் வசூல்!..

Byமதி

Oct 23, 2021

சேலத்தில் பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை நிலம் ஒதுக்கப்பட்ட இடத்தை சமப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பத்திரிகையாளர்கள் சார்பாக கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை, வருவாய் துறையினர் இணைந்து அந்த இடத்தை சமப்படுத்தி கொடுத்துள்ளனர்.
இதற்கான அனைத்து செலவுமே பொதுப்பணித்துறை ஏற்றுக் கொண்டுள்ளது. தற்போது சம படுத்தப்பட்ட நிலத்தை வருவாய்த்துறை, சர்வேயர் மூலம் பயனாளிகள் அனைவருக்கும் 900″ சதுரடி என்ற அளவில் அளந்து திடப்படுத்தி முட்டுக்கல் போடும் பணியும் முடிந்து, பத்திரிகையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என வருவாய்த் துறையினர் கூறினர்.

ஆனால் சிலர் நிலம் சமப்படுத்தும் பணியில் ஈடுபட்ட நபர்களுக்கு கை செலவு கொடுக்க வேண்டும் என்பதால் பணம் வசூலிக்க ஏற்பட்டதாகவும்,
தற்போது முட்டுக்கல் நட வேண்டும் என கூறி சக பத்திரிகையாளரிடம் பணம் வசூலிக்க துவங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது சம்பந்தமாக சில பத்திரிகையாளர் விசாரித்தபோது, இது சம்பந்தமாக அனைத்திற்கும் நீங்கள் பணம் செலுத்தியுள்ளனர். எனவே இது ஒப்படைக்கும் பணிகள் எங்களுக்கு உரியது .இதற்காக எந்த பணமோ / அன்பளிப்போ யாரிடமும் வசூலிக்க கூறவில்லை. அரசு அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி யாரேனும் பணம் வசூலிப்பில் ஈடுபட்டால் எங்களிடம் புகார் கொடுங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலத்திற்கு ( மனை ஒன்றுக்கு) பணமானது ரூ. 31,500, அளந்து திட்ட படுத்துவதற்கு மனை ஒன்றுக்கு ரூ. 400 ரூபாயும், மனை ஒன்றுக்கு முட்டு கல்லுக்காக 110 ரூபாய் என மொத்தம் 32 ஆயிரத்து 10 ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளது. வீட்டு மனைகளை பிரித்து பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் வரை வருவாய் துறையின் பணி. இதற்காக எந்த பணமும் யாரிடமும் நாங்கள் கேட்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *