• Fri. Apr 26th, 2024

ராஜ்கின் குடும்பத்திற்கு 10 லட்சம் அறிவித்த முதல்வருக்கு மீனவர்கள் கண்டனம்!…

இலங்கை கடற்படை கப்பலால் மோதி கொல்லப்பட்ட இந்திய மீனவர் ராஜ்கிரனுக்கு நீதிவேண்டி அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பில் தங்கச்சிமடத்தில் இன்று காலை 10 மணிக்கு கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் மீனவ சமுதாய தலைவர் சவரியாபிச்சை தலைமையில் இராமேஸ்வரம், மண்டபம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்திய மீனவர் ராஜ்கிரனை கொன்ற இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மீனவர் கொலையை தடுக்காத மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வரும் முன் மீனவர் கொலைக்கு 1கோடி இழப்பீடு கேட்டவர், தற்போது ஆட்சிக்கு வந்த பின் 10லட்சம் அறிவித்திருப்பது குறித்து மீனவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். மத்திய மாநில அரசுகள் மீனவர் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரவேண்டும். மேலும் இந்திய மீனவர் பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தவேண்டும். இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்திய பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் மீனவர்களை சந்திக்க முன்வரவேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

விசைப்படகு மீனவ சங்க தலைவர்கள் சேசுராஜ், ஜான்பீட்டர், சகாயம், லோவித்தரஸ், மோட்சம் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். 300 மேற்ப்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *