நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் சுதா கொங்குரா இயக்கத்தில் 2D Entertainment நிறுவன தயாரிப்பில் உருவான “சூரரைப் போற்று” உலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படமாக மிகப்பெரும் வெற்றியை பெற்றது. படம் வெளியாகி பல மாதங்களை கடந்து இன்னும் பல இடங்களிலிருந்தும், படத்திற்கான பாராட்டுக்களும் அங்கீகாரமும் குவிந்த வண்ணம் இருக்கிறது.
சமீபத்தில் Sony Music South நிறுவனம் கடந்த வருடத்தில் தமிழ் தெலுங்கு மொழிகளில் அதிகம் பேரால் ரசிக்கப்பட்டு விரும்பி கேட்கப்பட்ட ஆல்பமாக சூரரைப் போற்று ஆல்பத்தை தேர்வு செய்து சான்றிதழ் தந்துள்ளது.

Sony Music South நிறுவனம் அளித்த இந்த பாராட்டை கொண்டாடும் வகையில், இசையமைப்பாளர் G.V.பிரகாஷ், இயக்குநர் சுதா கொங்குரா, நடிகர் சூர்யா கூட்டணி சந்தித்தது. இவர்கள் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனையொட்டி இக்கூட்டணி மீண்டும் இணைவதாக தகவல் பரவிவருகிறது.
இது குறித்து இசையமைப்பாளர் G.V.பிரகாஷிடம் கேட்டபோது பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது விரைவில் எங்கள் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையும் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் இந்த தகவலை உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.