• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பொதுமக்கள் குடிநீர் கேட்டு எம் எல் ஏ சீனிவாசனிடம் வாக்குவாதம்..,

ByS.Ariyanayagam

Apr 16, 2026

பொதுமக்கள் குடிநீர் கேட்டு எம்எல்ஏ சீனிவாசனிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இவர் தற்போது திண்டுக்கல் எம்எல்ஏவாக உள்ளார்.

இவர் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி காந்திநகர் பகுதியில் பிரச்சாரத்திற்கு வந்தார்.
அப்போது பொதுமக்கள் சீனிவாசனிடம் குடிநீர் பிரச்சனை குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். கூச்சல் அதிகமானதால் சீனிவாசன் கூட்டத்தில் கூச்சலை நிறுத்துங்கம்மா என பெண்களைக் கடிந்து கொண்டார். நாங்கள் சொல்வதை கொஞ்சம் கேளுங்க. அப்புறம் நீங்க பேசுங்க. நாங்க என்ன சொல்ல வர்றோம், என்பதை நீங்கள் கேட்காமல் நாங்க என்ன செய்ய முடியும்.

பின்பு பொதுமக்கள் சரா மாறியாக கேள்வி கேட்டதால் ஒன்றிய செயலாளர் தர்மராஜை பதில் சொல்லச் சொன்ன சீனிவாசன் சொன்னார். பொதுமக்கள் திருப்தி அடையாததால், பொதுமக்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய தர்மராஜ். பின்பு அந்த இடத்தில் சீனிவாசன் ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு புறப்பட்டுச் சென்றார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.