• Thu. Mar 28th, 2024

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருநாள் முன்னதாக நேற்றோடு நிறைவு பெற்றது.


நவம்பர் 29ஆம் தேதி தொடங்கியது. இதில் பல முக்கிய மசோதாக்கள் மீது முடிவுகள் எடுக்கப்பட்டன. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற எதிர் கட்சிகள் நாடாளுமன்ற மாண்பைக் கெடுக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக இந்த கூட்டத்தொடரில் 12 மாநிலங்களவை எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம்,வேளாண் சட்டதிருத்த மசோதாவை திரும்பப்பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது உள்ளிட்டவற்றால் இரு அவைகளிலும் தொடர் அமளி நிலவியது.


எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிக்கு மத்தியில் வேளாண் சட்ட திருத்த மசோதா ரத்து செய்யப்பட்டது. முன்னதாக லக்கிம்பூர் விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் தொடர்புடைய மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கக்கோரி எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பியது குறிப்பிடதக்கது.
மக்களவையில் நடப்பு கூட்டத் தொடரில் ஒன்பது மசோதாக்கள் நிறைவேற்றபட்டன.

ஆதார் அட்டையோடு வாக்காளர் அட்டையை இணைக்கும் மசோதா மிக முக்கியமான மசோதவாக கருதப்பட்டது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் பலரின் ஓட்டுரிமை பாதிக்கபடும் என எதிர் கட்சிகள் எதிர்த்து வந்தனர். இருப்பினும் இரு அவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த குளிர்கால கூட்டத்தொடரில் பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *