• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

இந்தியாவில் மூடப்பட்ட விமானநிலையங்கள் திறப்பு

Byவிஷா

May 12, 2025

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தின் எதிரொலியாக, இந்தியாவில் மூடப்பட்ட 32 விமானநிலையங்களும் திறக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய அரசு ஜம்மு அன்ட் காஷ்மீரில் உள்ள அவந்திப்பூர் விமான நிலையம், ஹரியானாவில் உள்ள அம்பாலா உள்நாட்டு விமான நிலையம், பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமான நிலையம், குஜராத்தில் உள்ள நலியா விமான நிலையம், உத்தரபிரதேசத்தில் உள்ள சர்சாவா விமான நிலையம், லடாக்கில் உள்ள தோய்ஸ் விமான நிலையம் மற்றும் ராஜஸ்தானில் உள்ள உத்தர்லாய் விமானப்படை நிலையம் ஆகியவற்றை மே 9-ஆம் தேதி முதல் தற்காலிகமாக மூடியுள்ளது. இந்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு பிறகு தெரிவிக்கப்பட்டது.
கிஷன்கர், பூந்தர், லூதியானா, ஸ்ரீநகர், ஜம்மு, லே, சண்டிகர், அமிர்தசரஸ், பாட்டியாலா, பதிண்டா, ஹல்வாரா, பதான்கோட், சிம்லா, காகல், தர்மசாலா, ஜெய்சால்மர், ஜோத்பூர், பிகானர், முந்த்ரா, ஜாம்நகர், ராஜ்கோட், போர்பந்தர், காண்ட்லா, கேஷோட், பூஜ், குவாலியர் மற்றும் ஹிண்டன் ஆகிய விமான நிலையங்களும் மூடப்பட்டன.
மே 15-ஆம் தேதி அதிகாலை 5.20 மணி வரையில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் பகல்காமில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியா பதிலடியாக ஆபரேஷன் சிந்துர் என்ற தாக்குதலை நடத்தியது. அதன் பிறகு மீண்டும் ட்ரோன் மூலம் பாகிஸ்தான் தனது தாக்குதலைத் தொடர்ந்தது. இந்த தாக்குதலையும் இந்தியா எதிர்கொண்டது. இந்நிலையில் டெல்லி மற்றும் இஸ்லாமாபாத் பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
மே 8-ஆம் தேதி அன்று சுமார் 450 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதோடு ஜம்மு ரூ காஷ்மீர், அமிர்தசரஸ் மற்றும் சிம்லா உட்பட வடமேற்கு இந்தியாவில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களும் மூடப்பட்டது.

மே 10-ஆம் தேதியான சனிக்கிழமை அன்று வடக்கு, மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தான் எல்லைக்கும் அருகில் இருக்கும் 4 விமான நிலையங்களான புஜ், காண்ட்லா, ஜாம்நகர் மற்றும் ராஜ்கோட் போன்ற விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜாம்நகர், ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் போன்ற பகுதிகளுக்கு செல்லும் விமானங்களும் மே 10 வரை ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா அறிவித்தது. இண்டிகோ விமான நிறுவனமும் 165-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்திருந்தது.
இந்தநிலையில், போர் ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளதால், மூடப்பட்ட 32 விமான நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன. மூடப்பட்ட விமான நிலையங்களில் செயல்பாடுகள் மீண்டும் தொடங்குவது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.