உதகை நகராட்சிக்குட்பட்ட 18 வது வார்டு செல்லும் சாலையில் உள்ள செடிகளை அகற்றிய தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.
உதகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் பல்வேறு பணிகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக 18 வது வார்டு உறுப்பினர் கே.ஏ.முஸ்தபா வலியுறுத்தலின் பேரில், தர்வேஸ் மஹால் அருகே உள்ள நடைபாதையில் ஆக்கிரமித்துள்ள காட்டு செடிகளை உதகை நகராட்சி நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி மற்றும் ஆணையாளர் காந்திராஜ் அறிவுறுத்தலையின்படி தூய்மை பணியாளர்கள் அகற்றினர்.
சாரல் மழை மற்றும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தூய்மை பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டது அப்பகுதி மக்களிடையேபெரும் வரவேற்பை பெற்றனர்.