சோழவந்தான் பேரூராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கானமக்கள் இயக்கத்தின் சார்பில் தூய்மைப்பணி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் பேரூராட்சியின் பொது இடங்கள் கோவில்கள் பூங்காக்கள் போன்ற இடங்களில் தீவிர தூய்மை பணி செய்தல் அனைத்து வீடுகள் மற்றும் கடைகளில் கழிவுகளை தரம் பிரித்து வழங்குதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் படி மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் தலைமையில் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் முன்னிலையில் சோழவந்தான் பேரூராட்சியின் பேருந்து நிலையம் இரயில்வே பீடர் ரோடு ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
![](https://arasiyaltoday.com/wp-content/uploads/2023/02/6b57851b-4a4b-4fa2-87e7-883c8327d08f-1024x462.jpg)
அதனைத் தொடர்ந்து பேரூராட்சி பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அகற்றப்பட்டு கழிவுகளை தரம் பிரித்து வழங்கிய நபர்களுக்கு பரிசுகள் வழங்கியும் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.இந்நிகழ்வில் சோழவந்தான் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் .முருகானந்தம் பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன், வார்டு உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்..