• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை மாவட்டத்தில் 115தேர்வு மையங்களில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு

ByA.Tamilselvan

May 5, 2022

மதுரை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது – .மாணவர்கள் தேர்வு எழுத 115 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 323 பள்ளிகளில் பயின்ற 36,555 மாணவ – மாணவிகள் 115தேர்வு மையங்களில் தேர்வு எழதுகின்றனர். இதேபோன்று கற்றல் குறைபாடு, மன வளர்ச்சி குன்றியோர், காது கேளாத வாய் பேசாதோர், கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பிரிவுகளில் 161 மாணவ – மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வறை கண்காணிப்பு பணியில் 1,888 முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர், 193 அலுவலர்களை கொண்ட நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது, தேர்வை கண்காணிக்க 30 க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது, துணை ஆட்சியர் தலைமையில் வினா, விடைத்தாள் எடுத்து செல்ல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வினா, விடைத்தாள்கள் மையங்களுக்கு ஆயுதம் ஏந்திய காவல்துறை பாதுகாப்பும், ஒவ்வொரு தேர்வு மையத்திலும் சார்பு ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மே 5 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது, காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரையிலும் தடையில்லா பேருந்து சேவை வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தேர்வானது தொடங்கி நடைபெற்றுவருகிறது
இரு ஆண்டுகளுக்கு பின் பொதுத்தேர்வு எழுதுவதால் போதியளவிற்கு பயில முடியாத நிலை ஏற்பட்டதாக மாணவிகள் தெரிவித்தனர்.

.