• Wed. Dec 11th, 2024

கொரோனா விழிப்புணர்வு பேரணி!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்க பணியாளர்கள் கலந்து கொண்ட கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

 அதனை முன்னிட்டு பேரூராட்சி தலைவர் சந்திரகலா தலைமையில், செயல் அலுவலர் சின்னசாமி பாண்டியன் முன்னிலையில் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து கவுன்சிலர்கள், அலுவலர்க பணியாளர்கள் பேரணியாக, ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக, எம்ஜிஆர் சிலை வரை வந்து, அதனை தொடர்ந்து கடைவீதி, நாடார் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அப்போது விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சுமந்தவாறு, விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி

ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து செயல் அலுவலர் சின்னச்சாமி பாண்டியன் கூறியதாவது .., தமிழக அரசின் உத்தரவுப்படி வருகின்ற 8 . 5 . 2022 அன்று ஆண்டிபட்டியில் கொண்டமநாயக்கண்பட்டி சமுதாயக்கூடம், சக்கம்பட்டி கல் கோவில் மண்டபம் , சக்கம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளி வளாகம் ,மேலத்தெரு முனியாண்டி கோவில் சமுதாயக்கூடம், பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் ,இதில் இதுவரை தடுப்பூசி போடாத நபர்களும், முதல் தவணை தடுப்பூசி போட்டு எட்டு வார காலம் முடிவுற்ற நபர்களும் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளமாறு கூறினார் .மேலும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு ஒன்பது மாதம் நடைபெற்ற 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது தவணை ஊசியும் போட்டுக் கொள்ளுமாறு கூறினார்.ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.