மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மருத்துவமனை எதிரில் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து சி.ஐ.டி.யு.சங்கத்தினர் ஆர்பாட்டம் செய்தனர்.குத்தாலம் அரசு மருத்துவமனையில் கடந்த எட்டு ஆண்டுகளாக பணி செய்த தூய்மை காவலர்களை பணிநீக்கம் செய்துள்ளனர்.

இதனை மறுபரிசீலனை செய்ய பல முறை மருத்துவமனை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனை கண்டித்து இன்று சி.ஐ.டி.யு அமைப்பின் மாவட்ட துணை செயலாளர் சுந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மை காவலர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட கோரியும்.கோரிக்கையை அலட்சியபடுத்தும் அரசு நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் ராமகுரு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.