• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உயிர் பலி வாங்கும் முன் பாதாள சாக்கடை மூடிகளை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

ByKalamegam Viswanathan

Apr 11, 2023

மாநகராட்சி பணம் இல்லையா தருகிறோம் பாதாள சாக்கடை மூடியை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை உயிர் பலி வாங்கும் முன் பாதாள சாக்கடை மூடிகளை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் முன் வருமா 200 ரூபாய் மூடியை பொருத்தினால் உயிரிழப்பை தவிர்ப்பது மட்டுமல்லாது இழப்பீடாக பல லட்சம் தரவேண்டிய அவசியம் இருக்காது.


கடந்த 15 நாட்களுக்கு மேலாக மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 70 வது வார்டு பகுதியில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் திறந்த நிலையிலே உள்ளது குறிப்பாக நேரு நகர் திருவள்ளுவர் தெரு பாபு மெடிக்கல் அருகே உள்ள பாதாள சாக்கடை மூடி உடைந்து கடந்த 15 நாட்களுக்கு மேல் ஆகி மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர் பாதாள சாக்கடை மூடி திறந்திருப்பதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அதில் விழுந்து உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது தங்கள் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை மாநகராட்சிக்கு பணம் இல்லை என்றால் நாங்கள் உதவி செய்கிறோம் மூலிகை பொருத்தி தருகிறோம் அந்த ரூபாயில் பாதாள சாக்கடை மூடியை சரி செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கையும் வைக்கின்றனர்
ஒரு படத்தில் நடிகர் விவேக் கூறியது போல் 200 ரூபாய் மூடியை பொருத்தி இருந்தால் ஒரு உயிரும் போய் இருக்காது இழப்பீடாக பல லட்சமும் தர வேண்டி இருக்காது என அன்றே சொல்லி இருந்தார் அது போன்ற நிலை மதுரை மாநகராட்சி 70 வது வார்டில் நடக்காத அளவிற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா உயிர் பலி ஆன பிறகு நடவடிக்கை எடுப்பார்களா என குற்றச்சாட்டை முன்வைக்கும் பொதுமக்கள் துரித நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள பாதாள சாக்கடை மூடிகளை உடனடியாக சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என்பதை அனைவரும் கூடிய எதிர்பார்ப்பாக உள்ளது