• Thu. Apr 25th, 2024

ஆண்டிபட்டியில் குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் .

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்குமாவட்ட பொறுப்பாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.இந்த கூட்டத்தில் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் தமிழக முதலமைச்சர் தலைமையில் மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும்,கடந்த 1991 முதல் 2021 வரையிலான 31 ஆண்டுகளில் 5 முறை மட்டுமே இந்த கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது.

தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற 100 நாட்களுக்குள் 2021 ஜூலையில் நடத்தவேண்டிய கூட்டத்தை நடத்தியதற்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா நோய் தொற்று நேரத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் அதிக அளவில் நடந்த தீண்டாமை வன்கொடுமைகளை தமிழக முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும் .

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.அரசு வேலை,வீடு,நிலம் மற்றும் கல்வி ஆகிய அரசு உதவிகள் எவ்வளவு வழங்கப்பட்டுள்ளன என்ற புள்ளி விவரம் கூட அரசு அதிகாரிகளுக்கு தெரியவில்லை. 2010ஆம் ஆண்டு 33 நாட்களுக்கு ஒன்று என்று இருந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்புணர்ச்சிகள் 2020இல் மூன்று நாட்களுக்கு ஒன்று என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது, என்ற தகவல் வேதனை அளிக்கிறது.எனவே அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் மற்றும் அனைத்து அரசின் சலுகைகளும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.


மேலும் 2022 ஜனவரி மாதம் நடத்தப்பட வேண்டிய கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் மாரியம்மாள்,ஒன்றிய நிர்வாகி கணேசன், ஆலோசகர் கலாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *