• Sat. Apr 20th, 2024

ஆப்கனிஸ்தானில் ஒரு வருடம் கழித்து திரையரங்குகள் திறப்பு….

Byகாயத்ரி

Aug 29, 2022

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த ஒரு வருடமாக ஆட்சி செய்து வருகின்றார்கள். அவர்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்த நாள் முதல் பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் மேல்நிலை கல்வி கற்பதற்கு தலைப்பான்கள் தடை விதித்து சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ஆப்கானிஸ்தான் மக்கள் தலிபான்களின் கொடுமையால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றார்கள் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சமீபத்தில் கூறியிருந்தது.

இந்த சூழலில் ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கு பின் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட இருக்கின்றது. இதனால் திரைப்பட நடிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். இருந்தபோதிலும் இதிலும் பெண் கலைஞர்களுக்கான இடம் கடுமையாக மட்டப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதாவது அங்கு 37 படங்கள் வெளியாவதற்கு தயார் நிலையில் இருக்கின்றது. இருப்பினும் இந்த அனைத்து திரைப்படங்களிலும் சேர்த்தே அதிபா முகமது என்ற ஒரு பெண் நடிகர் மட்டுமே நடித்திருக்கின்றார்.

இதனால் அங்கு பெண்கள் திரைப்படங்களில் நடிப்பதற்கு தடைகள் இல்லாமல் அனுமதி தர வேண்டும் என கோரிக்கைகள் எழுந்திருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *