

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தவிர்க்க முடியாத கதாநாயகியாகநடித்துக்கொண்டிருந்தவர்நடிகை காஜல் அகர்வால் திருமணம் ஆகிவிட்டால் கதாநாயகி அந்தஸ்து காணமல் போய்விடும் என்பது தென்னிந்திசினிமாவில் எழுதப்படாத சட்டமாக இருக்கிறது.
ஆனால் இந்தி சினிமாவில் திருமணம் ஆகி, குழந்தை பிறந்தபின்னும் கதாநாயகியாக ஐஸ்வர்யாராய் நடித்து வந்தார். அதே போன்று தெலுங்கில் சமந்தா திருமணத்திற்கு பின்பும் பிசியான கதாநாயகியாக நடித்து வந்தார். இவற்றையெல்லாம் பார்த்த காஜல் அகர்வால்பிசியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே தொழிலதிபர் கவுதம் கிச்லுவை திருமணம் செய்து கொண்டார். தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனால் அவர் சில தெலுங்கு படங்களில் இருந்தும், தமிழில் இந்தியன் இரண்டாம் பாகத்தில் இருந்து கால்ஷீட் பிரச்சினை காரணமாகவிடுவிக்கப்பட்டிருக்கிறார்.இதுகுறித்து காஜல் அகர்வால் நீண்ட நாட்களுக்கு பின் கருத்து தெரிவித்திருக்கிறார் திருமணம் ஆனபிறகு, நடிகைகள் சினிமாவிலிருந்து விலகும் காலம் தற்போது மாறிவிட்டது. உலகம் முழுவதுமுள்ள சினிமாத் துறைகள் மாறிவிட்டன. நடிகர்கள் எடுக்கும் சொந்த முடிவுகள் அவர்களது சினிமா வாழ்க்கையில் பிரதிபலிப்பதில்லை என்பதை புரிந்துகொள்ளும் அளவுக்கு மக்கள் முதிர்ச்சி அடைந்திருப்பது மகிழ்ச்சி. வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் நாம் தொடர்ந்து நம் வேலையை செய்யலாம்.திருமணத்துக்கு முன்பிருந்தே நான் எனக்கான கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்கிறேன். சமீபகாலமாக எனக்கான கதாபாத்திரங்களையும் நான் கவனமாக தேர்வு செய்து வருகிறேன். எனது சொந்த வாழ்க்கை முடிவுகள் அதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.இவ்வாறு காஜல் கூறியுள்ளார்.
