
கார்த்திக்நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்திருக்கும் படம் மாறன்.இந்தப்படத்தில் மாளவிகா மோகனன், ஸ்முருதிவெங்கட் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தனுஷ் 43 என்று சொல்லப்படும் இந்தப்படம் 2020 பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போதே 2020 அக்டோபர் மாதம் வெளியாகும் என்று சொல்லியிருந்தார்கள்.
ஆனால், கொரோனா காரணமாக எல்லாம் மாறிவிட்டது.இப்போது இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையதளத்தில் வெளியாகவிருக்கிறது.பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் இப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இதுவரை இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்படவில்லை.அதற்குக் காரணம், அண்மையில் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினியைப் பிரிவதாக தனுஷ் அறிவித்ததுதான் காரணம் என்கிறார்கள்.இருவரும் இணைந்து பிரிவை அறிவித்திருந்தாலும் தனுஷுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு. சமூகவலைதளங்களில் அது வேகமாகப் பரவி வருகிறது
தனுஷ் மீதுள்ள கோபம் படத்தை பாதித்துவிடும் என்பதால் படவெளியீட்டைத் தள்ளிப்போட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.இப்போது அதையும் தாண்டி ஒரு செய்தி உலாவந்துகொண்டிருக்கிறது.அது.?தனுஷ் இன்னும் மாறன் படத்துக்குக் டப்பிங் பேசவில்லையாம். அதனால் படத்தின் முதல் பிரதி தயாராகமல் இருக்கிறதுபடத்தை முழுமையாகத் தயார் செய்து வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்த தயாரிப்பு நிறுவனம், டப்பிங் பேசுவதற்காக தனுஷை அணுகியிருக்கிறது.
தற்போது ஐதராபாத்தில் இருக்கும் தனுஷ், இப்போது என்னால் சென்னைக்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டாராம். அதற்குக் காரணம்,முன்பொருமுறை மதுரை விமானநிலையத்தில் வைத்து சிவகார்த்திகேயனை கமல்ஹாசன் ரசிகர்கள் தாக்கியது போல் சென்னை வந்தால் ரஜினி ரசிகர்களால் தாக்கப்படும் சூழல் உருவாகும் என்று அச்சப்படுகிறாராம்.
சென்னை வர அவர் பயப்படுவதால், படக்குழு ஐதராபாத் போயிருக்கிறதாம். இப்போது அங்கே தனுஷ் டப்பிங் பேச தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
