• Fri. Nov 28th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விக்கல் நிக்குமா நிக்காதா பற்றி சினிமா

தமிழ்க் குறும் பட வரலாற்றில் முதல் முறையாக ‘விக்கலை’ மையமாக வைத்துஒருபடத்தைஉருவாக்கியிருக்கிறார் நடிகர் ஆதேஷ் பாலா.மனிதர்களுக்கு இருக்கும் பொதுவான ஒரு குறைபாடு ‘விக்கல்’. தண்ணீர்த் தேவையாக இருக்கும்பட்சத்தில் நமக்கு உணர்த்தும்விதமாக உடலே நமக்குக் கொடுக்கும் எச்சரிக்கைதான் ‘விக்கல்’ என்ற உணர்வு.

இப்போது இதனை மையமாக வைத்தே ‘நிக்குமா நிக்காதா’ என்ற பெயரில் ஒரு குறும் படத்தை உருவாக்கியிருக்கிறார் நடிகர் ஆதேஷ் பாலாமுண்டாசுப்பட்டி’, ‘மம்பட்டியான்’, ‘பேட்ட’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ஆதேஷ் பாலா. இவர்தான் இந்தக் குறும் படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார்.“ஒருவனுக்கு வாழ்க்கையில் நிற்கவே முடியாத அளவுக்கு ‘விக்கல்’ வந்தால் அவன் என்ன செய்வான்..?” என்பதுதான் இந்தக் குறும்படத்தின் கதை.


இந்தக் குறும் படத்தில் ஆதேஷ் பாலாவுடன் ‘லொள்ளு சபா’ புகழ் ‘சிரிக்கோ’ உதய், ராம்குமார் பழனி, கார்த்திபன், தமிழ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.ஒளிப்பதிவு – அருண் ஐயப்பன் – படத் தொகுப்பு – ராம் விக்னேஷ், இசை – சதீஷ்குமார்.‘கடைசி பஸ்’ யு டியூப் சேனல் தயாரித்துள்ள இந்தக் குறும்படத்தை ‘கடைசி பஸ்’ கார்த்திக் இயக்கியுள்ளார்.இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் செந்தில், நடிகர் ‘ஆடுகளம்’ முருகதாஸ், நடிகர் பொன்னம்பலம், நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட், இயக்குநர் விருமாண்டி உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் இணைந்து வெளியிட்டனர்.