• Tue. Jul 15th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

சர்வதேச அங்கீகாரம் பெற்ற செந்நாய்

இயக்குனர் ஜெயக்குமார் சேதுராமன் இயக்கிய ‘செந்நாய்’ திரைப்படம் நேபாள சர்வதேச திரைப்பட விருதை வென்றுள்ளது.அறிமுக இயக்குனர் ஜெயக்குமார் சேதுராமன் இயக்கிய ‘செந்நாய்’ திரைப்படம் சமூகத்தின் பல பிரச்சனைகளை பேசியிருந்தது.

குறிப்பாக சாதிய அமைப்பு பற்றிப் பேசியிருந்தது.ஆண்டாள் பிரியதர்ஷினியின் தகனம் மற்றும் லீனா மணிமேகலையின் தெய்வங்கள் கதாபாத்திரங்களிலிருந்து ஈர்க்கப்பட்டு இந்த கதையின் நாயகியின் கதாபாத்திரத்தை இயக்குனர் ஜெயக்குமார் சேதுராமன் உருவாக்கியிருந்தார். அந்த கதாபாத்திரத்தில் நடிகை செம்மலர் அன்னம் நடித்திருந்தார்.


செந்நாய் திரைப்படம் ஏற்கெனவே போர்ட் பிளெய்ர் சர்வதேச திரைப்பட விழா 2021-ல் சிறந்த அறிமுக திரைப்படத்திற்கான விருதை பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது, நேபாள கலாச்சார சர்வதேச திரைப்பட விழா 2021-ல் சிறந்த சர்வதேச சிறப்பு மென்ஷன் விருதை பெற்றிருக்கிறது.


இதுகுறித்து பேசிய இயக்குனர் ஜெயக்குமார் சேதுராமன், சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘செந்நாய்’ திரைப்படத்தை திரையிடும் போது பார்வையாளர்கள் இந்தியாவில் வேரூன்றிப் போன சாதிய அமைப்பு குறித்து புரிந்துகொள்வார்களா? என்ற சந்தேகம் இருந்தது. நேபாளத்தில் உள்ள பார்வையாளர்கள் சரியாக புரிந்துகொண்டார்கள் என்று கூறியுள்ளார்.