மதுரை மாவட்டம் சோழவந்தான் இரும்பாடி ரோட்டில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பன்னிமுட்டி முனியாண்டி கோவிலில் கடந்த மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பன்னிமுட்டி முனியாண்டி சாமி மூலவர் மற்றும் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை காலை மண்டலாபிஷேகம் நடைபெற்றது. கோவில் முன்பாக அமைக்கப்பட்ட யாகசாலையில் பூஜைகள் செய்யப்பட்டு மந்திரங்கள் ஓத மண்டல அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பகவானுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் பால், தயிர் வெண்ணெய் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் பூசாரி சண்முகசுந்தரம் சிறப்பு அர்ச்சனைகள் செய்தார். இதில் சோழவந்தான், கருப்பட்டி, இரும்பாடி, நாச்சிகுளம், கரட்டுப்பட்டி, வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.