• Mon. Oct 7th, 2024

சித்திரை திருவிழா வரலாற்றில் இல்லாத அளவிற்கு சீரோடும் சிறப்போடும் நடைபெறும் -அமைச்சர் சேகர்பாபு

Byp Kumar

Apr 27, 2023

சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரம், இந்த ஆண்டு விஐபிகளுக்கான 800 கார் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது – தமிழகத்தில் பழனி உள்ளிட்ட 4 கோவில்களுக்கு ரோப்கார் அமைக்கப்பட்வுள்ளது – இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது
இதில் அமைச்சர் பி மூர்த்தி மாவட்ட ஆட்சியர் அணிஸ்சேகர் மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங், மேயர் இந்திராணி உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சேகர்பாபு :
மதுரை கள்ளழகர், மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா திக்விஜயம், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை, கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் நிகழ்வில் போது அதிகளவு பக்தர்கள் வருகை தருவார்கள், திருக்கல்யாண நிகழ்விற்கு 12ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்
தேரோட்டம் செல்லும் பாதைகள் மற்றும் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது எனவும், சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.போதிய அளவு மருத்துவமுகாம்கள் அதிகரிப்பது, சிசிடிவி கேமிராக்கள் அமைப்பு, மின்சாரம் தடையின்றி கிடைக்க நடவடிக்கைகள், குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கைகள், விஐபிகளுக்கு இந்த முறை கார் பாஸ் வழங்கவுள்ளோம், வரலாற்றில் இல்லாத அளவிற்கு சீரோடும் சிறப்போடும் நடைபெறும் ஏற்பாடுகள் உள்ளது, ஆற்றிற்குள் இறங்குவதற்காகாக ஆற்றை தூய்மைபடுத்தி ஒழுங்குபடுத்திவருகிறோம்
பூங்காக்கள், கல்லூரி மற்றும் பொழுதுபோக்கு இடங்களை இரவில் திறந்துவைக்க உத்தரவிட்டுள்ளோம்
ஆற்றை தூய்மையாக வைத்தால் மட்டுமே பக்தர்கள் எளிமையாக சென்றுவருவார்கள், நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு விஐபி பாஸ் வழங்கப்பட்டு 800வாகனங்களை நிறுத்த ஏற்பாடு , சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது, எந்தவித பணியும் விட்டுபோகாத வகையில் செயல்படவுள்ளோம், வருகின்ற கூட்டத்தை பொறுத்து யாரும் அச்சமின்றி வந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது, பாராம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகளில் வரும் பக்தர்களுக்கு அனுமதி, மாட்டுவண்டிகளை நிறுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1058 திருக்கோவில்களில் 1416 திருக்குளங்களுக்கு பராமரித்து வருகிறோம், இப்போதுவரை 87 குளங்களை மராமத்து பணிகளை செய்துள்ளோம், மன்னர் ஆட்சி கட்டமைப்பு உள்ளது. கழிவுநீர் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இந்த ஆண்டு ரோப்கார் பழனி, திருப்பரங்குன்றம், திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய 4 கோவில்களுக்கு விரைவில் ரோப்கார் ஏற்பாடு செய்யப்படும் பணிகள் நடைபெறுகிறது
கோவிலுக்கான செலவீனங்கள் அதிகமாக இருப்பதாலும் ஊடகங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் ஊடகங்களிடம் நேரலைக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *