ராஜபாளையம் சூப்பர் கிங்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் சோழபுரம் பழனியப்பா மேல்நிலைப்பள்ளி இணைந்து, முறம்பு பகுதியில் நடைபெற்ற NSS முகாமில் மாணவர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு (CWC) உறுப்பினர் செல்வா அழகு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகைச் சேர்ந்த திரு. மார்ட்டின் ஆகியோர் கலந்து கொண்டு, POCSO சட்டம், குழந்தைகளின் பாதுகாப்பு, பாலியல் துன்புறுத்தலிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது மற்றும் 1098 குழந்தைகள் உதவி எண் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர் அபிநயா, MBBS, மாணவர்களுக்கு தனிநபர் சுகாதாரம், தூய்மை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் குறித்து பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் ராஜபாளையம் சூப்பர் கிங்ஸ் ரோட்டரி சங்கத் தலைவர் ரொட்டேரியன் ஸ்ரீராம் மற்றும் செயலாளர் ரொட்டேரியன் விஜயேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, POCSO விழிப்புணர்வு சுவரொட்டிகள் பள்ளி வளாகம், காவல்துறை பூத் மற்றும் முரம்பு பகுதியிலுள்ள பொதுமக்கள் கூடும் இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் POCSO சட்டம் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பது, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.





