கடந்த கல்வியாண்டில் தங்களது மாணவர்களை, 100 சதவிகிதம் தேர்ச்சி பெற, அயராது பாடுபட்டு கடின உழைப்பை வழங்கிய ஆசிரியர்களை பெருமை படுத்தும் வகையில், கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள, தனியார் கல்லூரி வளாகத்தில், ஜூவல் ஒன் நிறுவனத்தின் சார்பாக, அரசு மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு நன்றி கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது..

வகுப்பறைகளுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து, கனவுகளை வளர்த்து சமூகங்களின், எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆசிரியர்களை கொண்டாடும் வகையில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியா, மாவட்ட கல்வி அலுவலர் கோமதி, மாநகராட்சி கல்வி அதிகாரி குணசேகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி பெருமை படுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எமரால்டு ஜூவல் இன்டஸ்டிட்ரி நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் கூறியதாவது..
ஜூவல் ஒன் நிறுவனததின் சார்பாக நடைபெற்ற ஆசிரியர்களை பெருமை படுத்தும் நிகழ்ச்சியை நடத்தியதில் எங்களது நிறுவனம் பெருமை அடைந்துள்ளது ஆசிரியர்களுக்கு நன்றி கூறும் இந்த விழாவில் கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளை தேர்வு செய்து, அந்த மாணவர்களின் வெற்றிக்கு பின்னால் நின்ற ஆசிரியர்களை மேடைக்கு அழைத்து பெருமை படுத்தினோம்.
அவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி, ஆசிரியர்களின் சேவையை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஜூவல் ஒன் நிறுவனம் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார் . ஆசிரியர்களை பெருமை படுத்த வேண்டியது, நமது சமூக பணி, அந்த பணியை சிறப்பாக கொண்டாடியதில் ஆசிரியர்களுடன் ஜூவல் ஒன் நிறுவனமும் பெருமை கொள்கின்றது என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





