• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் மக்களுடன் முதல்வர் முகாம்

ByKalamegam Viswanathan

Dec 23, 2023

சோழவந்தான் பேரூராட்சி சார்பாக மக்களுடன் முதல்வர் முகாம் இங்குள்ள எம் வி எம் மருதுமஹாலில் நடந்தது முகாமில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் அடிப்படை வசதிகள் உட்பட மக்கள் கோரிக்கைகள் கணினியில் பதிவு செய்ய வேண்டி இருப்பின் அக்கோரிக்கைக்கான அனைத்து ஆவணங்களையும் பொதுமக்கள் வருகை புரிந்து பதிவு செய்தனர் இதற்கான முகாமினை பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பு ஜீலான்பானு தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் ஜெயராமன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து முகாமினை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் லதா கண்ணன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்திய பிரகாஷ், வார்டு கவுன்சிலர்கள் ஈஸ்வரி ஸ்டாலின் குருசாமி, செல்வராணி ஜெயராமச்சந்திரன், நிஷா கௌதமன்ராஜா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர் இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன்மாறன், வசந்தகோகிலா சரவணன், ரேகா வீரபாண்டி, சுப்பிரமணியன், ஒன்றிய நிர்வாகிகள் ராஜா என்ற பெரிய கருப்பன், கேபிள் ராஜா, ராஜாராம், படுத்தப்பட்டோர் நலத்துறை உறுப்பினர் பெரியசாமி, முன்னாள் கவுன்சிலர் எஸ் எம் பாண்டி,சந்திரன், ரவி, சுரேஷ், மாணவரணி எஸ் ர் சரவணன் சங்கங்கோட்டை சந்திரன் ரவிஆகியோர் இத்திட்டம் குறித்து பேசினார்கள். முகாமில் தமிழ்நாடு மின்சார வாரியம், எரிசக்தி துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல்துறை மாற்றுத்திறனாளிகள் துறை,வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை ஆகிய துறையைச் சேர்ந்தவர்கள் முகாமில் தனித்தனி முகாம் அமைத்து பொதுமக்களிடம் அவர்களது கோரிக்கையை மனுக்களாக பெற்றுக் கொண்டு கணினியில் பதிவு செய்தனர்.