முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று, கனமழையால் பாதிக்கப்பட புளியந்தோப்பு பகுதியில் சேதமடைந்த மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளையும் பார்வையிட்டு, திரு.வி.க நகர் ஸ்டீபன்சன் சாலையில் நடைபெற்று வரும் பாலப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ச்சியாக, கொளத்தூர் சிவ இளங்கோ சாலை, பெரவள்ளூர் காவல் நிலையம் எதிரே உள்ள பகுதிகள், அசோகா அவின்யூ ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு, ஜி.கே.எம் காலனியில் உள்ள குளத்தை சீரமைக்கும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை துரிதப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.