கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் அவரது சிலை சென்னை அண்ணாசாலையில் மீண்டும் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் சாதனைகளைப் பட்டியலிட்டார். மேலும் கருணாநிதியை சிறப்பிக்கும் வகையில் சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் தோட்டத்தில் அவரது சிலை அமைக்கப்படும். சென்னை அண்ணா சாலையில் அண்ணா சிலை, பெரியார் சிலைகளுக்கு இடையே கருணாநிதியின் வெண்கல சிலை அமைக்கப்படும்; கருணாநிதியின் பிறந்த தினம் ஜூன் 3-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும். அன்றைய தினம் கருணாநிதியின் சிலை திறந்து வைக்கப்படும் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 அரசு விழாவாக கொண்டாடப்படும் சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
