
ஆன்மீக சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு தற்போது சசிகலா சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ஆன்மீக பயணத்தை நிறைவு செய்த நிலையில் அரசியல் பயணத்தை எப்போது தொடங்க போகிறீர்கள் என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர், ‘அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிச்சயம் மேல்முறையீடு செய்வேன். விரைவில் எனது அரசியல் பயணத்தை தொடங்குவேன், ‘என்றார். அதே போல் அரசியல் பயணம் தனிப்பட்ட பயணமா இல்லையென்றால் கூட்டணி வைத்து பயணமா , தன்னை வந்து சந்திக்கும் அமமுக கட்சி நிர்வாகிகளை டிடிவி தினகரன் தொடர்ந்து நீக்கம் செய்து வருவது குறித்து பிறகு பதில் கூறுவதாகவும் கூறினார்.