• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

டிச.4ல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ByA.Tamilselvan

Nov 28, 2022

டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள செல்லும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை பிரதமர் மோடி வருகிற டிசம்பர் 4-ந்தேதி ஏற்கிறார். இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி-20 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இந்த நிலையில் ஜி-20 அமைப்பு குறித்து விளக்கவும், அடுத்த ஆண்டு மாநாட்டை நடத்துவது தொடர்பாகவும் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தை டிசம்பர் 5-ந்தேதி டெல்லியில் பிரதமர் மோடி கூட்டியுள்ளார். இக்கூட்டத்தில் பங்கேற்க மாநிலமுதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தான் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த சூழலில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்காக அவர் வருகிற 4-ந்தேதி டெல்லி செல்லலாம் என்றும், 5-ந்தேதி கூட்டத்தை முடித்து விட்டு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது