

புதுச்சேரி அரசுஉயர் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநரகம் ஒருங்கிணைந்த சேர்க்கைக்குழு (சென்டாக்) சார்பில் 2025-26 கல்வி ஆண்டிற்கான UG நீட் அல்லாத தொழில்முறை படிப்புககள் UG கலை, அறிவியல்,வணிகவியல் மற்றும் நுண்கலை படிப்புகளுக்கு 10,577 இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு இன்று முதலமைச்சர் ரங்கசாமியால் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது.

அதன்படி நீட் அல்லாத UG தொழில்முறைப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு -B.Tech., B.Arch., B.Sc.(Hons), வேளாண்மை மற்றும் தோட்டக்கலை, B.V.Sc.& A.H ,B.Sc. (Nursing),B.P.T, B.Sc துணை மருத்துவப் படிப்புகளில் டிப்ளமோ, UG கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் படிப்புகள் (B.A,B.Sc., B.Com., B.B.A &B.C.A) ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தை www.centacpuducherry.in என்ற இணைய தளத்தில் இன்று முதல் வருகிற 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி கூறும் போது…
மத்திய அரசு மாநில வளர்ச்சிக்கு தேவையான நிதியை வழங்கி வருகிறது என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நோக்கமே மாநில அந்தஸ்து பெறுவது தான். எனவே நம்பிக்கைதான் வாழ்க்கை எனவே தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்போம் ஒரு நாள் மாநில அந்தஸ்து கிடைக்கும் என்றார்.

