தஞ்சை மாவட்டம் களிமேடு பகுதியில் இன்று அதிகாலை நடந்த தேர் விழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாலையில் தேங்கி இருந்த நீரில் மின்சாரம் பாய்ந்து 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி ,குடியரசுதலைவர் உள்ளிட்டோர் இரங்கல் தெரவித்திருந்தனர்.மத்தியரசு ,மாநில அரசு சார்பில் நிவாணத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்விபத்து குறித்து நேரில் பார்வையிடவும்.விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும் முதல் வர் ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலமாக திருச்சிசென்று அங்கிருந்து தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார்.
தற்போது தஞ்சை களிமேடு பகுதியில் தேர் விபத்து நடந்த இடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். எரிந்த தேரின் பாகங்களை பார்வையிட்டார். விபத்து குறித்து அதிகாரிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விளக்கம் அளித்து வருகின்றனர்.
இறந்தவர்களின் இறுதி நிகழ்ச்சியில்கலந்து கொள்வதோடு ,காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.