• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

Byகாயத்ரி

Dec 9, 2021

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்.

ராணுவ மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு பிறகு 13 பேரின் உடலும் ராணுவ வாகனத்தில் கொண்டுசெல்லபட்டு, வெலிங்டன் சதுக்கத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்மற்றும் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.