கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கன்னியாகுமரியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்தியாவின் தென் கோடி முனை கன்னியாகுமரி சுற்றுச் சாலை பகுதி அண்ணா சிலை முன் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி மு க சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபு தலைமையில் நடந்த தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் அகவை70 நாள் நிகழ்வில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேருராட்சி தலைவர் குமரி ஸ்டிபன், பொறியாளர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, சிறப்பு நிலை பேரூராட்சி தி மு க., காங்கிரஸ் கவுன்சிலர்கள். கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள். முதல்வரின் பிறந்த நாள் மகிழ்ச்சியை ஒருவருக்கு,ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.
ஒன்றிய செயலாளர் பாபு.குமரிக்கு வந்துள்ள பல்வேறு மொழி சுற்றுலா பயணிகள் மற்றும் நாடோடி கூட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இனிப்பு கொடுத்தும். தமிழக முதல்வரின் அகவை 70_நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.