• Mon. Mar 23rd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

உயிரிழந்த மாணவி பிரியா குடும்பத்தினரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

ByA.Tamilselvan

Nov 17, 2022

தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி பிரியா குடும்பத்தினரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாணம் மற்றும் அரசுபணிக்கான ஆணைகளை வழங்கினார்.
சென்னை ராணி மேரி கல்லூரியில் படித்து வந்த மாணவி பிரியா, அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்நிலையில், சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரியாவின் இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ரூ.10 லட்சம் நிவாரணத்திற்கான காசோலை, அரசு வேலைக்கான ஆணை உள்ளிட்டவை பிரியாவின் குடும்பத்தினரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.