

பெண் தெய்வம் பகவதியம்மன் கோவில் கொண்டுள்ள குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனாவை பாராட்டி முதல்வர் தங்கப்பதக்கம் வழங்கினார்.
இந்தியாவின் தென்கோடி, முன்று கடல்கள் சங்கமிக்கும் பகுதி, சூரியனின் உதயம், அஸ்தமனம் இரண்டையும் பார்க்கும் வகையில் இயற்கையின் அமைப்பு, சர்வதேச சுற்றுலா பகுதி இத்தனை சிறப்புகளை ஒருங்கே பெற்றுள்ள நிலப்பரப்பில், பெண் தெய்வம் பகவதியம்மன் கோவில் கொண்டதால் கன்னியாகுமரி என்ற பெயரை பெற்றது இந்த பகுதி.
குமரி மாவட்ட மக்களிடம் இயல்பாகவே ஆண், பெண் இருபாலரின் யார் எதை சொன்னாலும் அப்படியே நம்பி விடாது, எதிர் கேள்வி கேட்டு அய்யத்தை போக்கிக் கொள்ளும் வழக்கம். மன்னர் காலம் தொட்டு மக்களாட்சி நடக்கும் இன்றைய நாள் வரையில் ஒரு தனித்த குணம்.
குமரி மாவட்டம் 1957_ம் ஆண்டு நவம்பர் திங்கள் 1_ம் நாள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது (மொழிவழி) மாநிலங்கள் என்ற சட்டத்தால், குமரி மாவட்டத்தில் இதுவரை 3_பெண்கள் ஆட்சியாளராக இருந்த வரிசையில், அழகு மீனா குமரியின் 4_வது பெண் ஆட்சியாளராக பொறுப்பேற்ற நாள் முதலே குமரி மாவட்டத்தில் நிர்வாகம் ஒரு புதிய திருப்புமுனையை பெற்றுள்ளது. குமரி மக்கள் இவரிடம் வியந்து பார்ப்பது, ஒரு பெண் ஆட்சியரின் கால நேரம் பார்க்காத அரசுப்பணியில் காட்டும் முனைப்பு. தமிழகத்தில் பெரும் பான்மை மக்கள் எழுத்தறிவு பெற்ற மாவட்டம் என்ற நிலையில், அரசின் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு அதிகம் பெற்ற மக்களில். பெண்கள் மத்தியில் பாலின விகிதத்தை உயர்த்தியதில் தமிழகத்திலே முதல் இடத்தை பிடித்துள்ளது குமரி மாவட்டம்.

ஒரு பெண் ஆட்சியரின் நிர்வாகத்தின் சிறப்பாக பணியின் காரணமாக குமரி மாவட்டத்திற்கு கிடைத்த இந்த பெருமைக்கு காரணமாக ஆட்சியர் அழகு மீனா உள்ளார் என்பதை பாராட்டும் விதத்தில், உலக மகளீர் தினமான (மார்ச் 8)ம் நாள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், குமரியில் பெண் குழந்தைகள் பாலின விகிதத்தினை உயர்த்தியதில் சிறப்பாக செயல்பட்ட குமரி ஆட்சியர் அழகு மீனாவை பாராட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “தங்கப்பதக்கம்” வழங்கினார். இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பங்கேற்றனர்.
பெண் தெய்வத்தின் பெயர் கொண்ட மாவட்டத்தின் ஆட்சியர் அழகு மீனா முதல்வரின் பாராட்டு, பரிசுக்கு பின் ஆட்சியர் தெரிவித்தவை.
குமரி மாவட்ட சமூகநலன், மகளீர் உரிமைத்துறையின் கீழ் “பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டமானது 2022_2023_ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
பெண் குழந்தைகள் பாலின விகிதத்தினை உயர்த்துவதற்காக பல்வேறு வகையான விழிப்புணர்வு பிரச்சாரம் மாவட்ட மக்களின் முன் நடத்தப்பட்டு வருகிறது என ஆட்சியர் தெரிவித்தார்.

