கொல்கத்தா உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்தவர் கடந்த ஜனவரி நான்காம்தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக நியமிக்கப்பட்டார். கம்பீரமான தோற்றத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் களமிறங்கிய பேனர்ஜி, கொரோனா தொடர்பான அடுக்கடுக்கடுக்கான உத்தரவுகளை பிறப்பித்தார்.சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை விதிக்கதவறிய தேர்தல் ஆணையத்தின் மீது ஏன் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யக்கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பித்து திகைக்கவைத்தவர்…
நீட் தேர்வு தொடர்பான நீதிபதி ஏ.கே.ராஜன் குழு எதிர்த்து பாஜக வழக்கு தள்ளுபடி,…
மருத்துவப்படிப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் இப்படி பல உத்தரவுகளை வழங்கியவர்…
வழக்கறிஞர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவான எதிரான மாறுபட்ட கருத்துக்கள் இருந்தபோதிலும் பொதுவாக கடினமானவர் என்று பெயர் எடுத்தவர்.
மேகாலாயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் உலாவருகிறது.அதில் எது உண்மை என்பது உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கே வெளிச்சம். சஞ்சீப் பேனர்ஜி துவக்ககாலத்தில் பத்திரிகையாளராக இருந்ததால் என்னவோ அவரது ஒவ்வொரு உத்தரவும் முக்கிய செய்தியாக அனைவராலும் பார்க்கப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது வாத பிரதிவாதங்களை சீக்கிரம் முடியுங்கள் என்பதை சூசமாக தேங்க்யூ, தேங்க்யூ என்பார்.
இறுதியில் தமிழ்நாடு மக்களுக்கு கடமைப்பட்டுள்ளேன் என்று தேங்க்யூ சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டார்…