பொதுத்துறை வங்கிகளில் முன்னணி வங்கி எஸ்பிஐ. இந்த வங்கி தற்பொழுது தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இனி, ஏடிஎம்களில் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் YONO செயலியைப் பயன்படுத்தி இனி ஏடிஎம்களில் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.10,000 வரை பணம் எடுக்கலாம். எஸ்பிஐ யோனோ ஆப் மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பது எப்படி என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
• உங்கள் செல்போனில் YONO செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் உள்நுழைய வேண்டும்.
• முகப்புப் பக்கத்தில் உள்ள YONO Cash என்பதைக் கிளிக் செய்யவும்.
• பின்னர் YONO Cash இன் கீழ் ATM பிரிவில் கிளிக் செய்யவும்.
• அதில் தேவையான தொகையை பதிவிடவும்.
• அடுத்ததாக 6 இலக்க பின் நம்பரை உருவாக்கவும்.
• நீங்கள் பின்னை உருவாக்கியதும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு YONO பணப் பரிவர்த்தனை எண் வரும். இந்த எண்ணை 6 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.
• இப்போது ஏடிஎம்மில் உள்ள யோனோ கேஷ் விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
• பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட YONO பணப் பரிவர்த்தனை எண்ணையும், நீங்கள் உருவாக்கிய 6 இலக்க பின்னையும் உள்ளிடவும்.
• இந்த செயல்முறை முடிந்த பின்னர், நீங்கள் இப்போது ஏடிஎம்மில் இருந்து பணத்தைப் பெறலாம்.