நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி க்ரே மேன்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘வாத்தி’ மற்றும் ‘நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
இந்த நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படம் ‘லீடர்’ என்ற தெலுங்கு படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது
‘லீடர்’ முதல் பாகத்தில் ஹீரோ ராணா, முதலமைச்சர் கேரக்டரில் நடித்து வந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் தனுஷ் முதலமைச்சர் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது