• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சென்னை டி.பி.ஐ. வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் முதல்வர் அறிவிப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று முதல்-வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்கு ஆற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வண்ணம் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்காக ரூ.7,500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை 5 ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு, நடப்பு ஆண்டிற்கு ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் நடப்பு ஆண்டிலேயே பல்வேறு கட்டுமானத்திற்கும், மராமத்துப் பணிகளுக்கும் கூடுதலாக ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதோடு, பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை செயல்படும் டி.பி.ஐ. வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனின் உருவச்சிலை நிறுவப்படுவதுடன், அவ்வளாகம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்றும் அழைக்கப்படும். மேலும் கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்குப் பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது