• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சென்னை மழைநீர் : மக்கள் கோலம் போட தெளித்த நீர்..,கலாய்த்த இளைஞர்கள்..!

Byவிஷா

Dec 4, 2023

மிக்ஜாம் புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கி மக்களை கடும் அவதிக்குள்ளாகி வருகிறது.
இதனிடையே மழை பாதிப்பு குறித்து மாநகராட்சி நிர்வாகத்தை கேள்வியெழுப்பும் வகையில், எழும்பூரைச் சேர்ந்த இளைஞர்கள் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ‘மழை நீர் தேங்கவே இல்ல, இதெல்லாம் மழை நீர் இல்ல, வீட்டு முன்னாடி மக்கள் கோலம் போட தண்ணி தெளிச்ச நீர்’ என இடுப்பளவு தண்ணீரில் இறங்கி, அரசின் நிர்வாகத் தோல்வியை நூதனமாக படம்பிடித்துக் காட்டியுள்ளனர்.