• Fri. Jan 17th, 2025

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகை

ByN.Ravi

Apr 29, 2024

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகையை முன்னிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தேர்தல் விதிமுறை காரணங்களால் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 9.00 மணிக்கு புறப்பட்டு, தற்போது மதுரை விமான நிலையத்திற்கு 10.10 மணிக்கு வருகை தந்தார்.
தொடர்ந்து, இங்கிருந்து சாலை மார்க்கமாக நிலக்கோட்டை, வத்தலகுண்டு வழியாக கொடைக்கானல் செல்கிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு, மதுரை விமான நிலையம் முதல் கொடைக்கானல் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்
பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை விமான நிலையத்திலும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
முதல்வர் தனது குடும்பத்துடன் ஓய்வு பயணம் என்பதால், மதுரை விமான நிலையத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்கள் என யாருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையதிலிருந்து, சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டு சென்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட 11 பேர் தனி விமானத்தில் மதுரை விமான நிலையம் வந்தடைந்து கார்களில் புறப்பட்டு சென்றனர்.