சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது
சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் வார நாட்களில் (திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை) வழக்கம் போல காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும்.
கூட்ட நெரிசல் நேரமான காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் ரெயில்கள் இயக்கப்படும்அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
2021-ம் ஆண்டில் அரசு பொது விடுமுறை நாட்களில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரெயில், ஜனவரி 1-ந்தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டு, அனைத்து அரசு பொது விடுமுறை நாட்களிலும் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.