• Wed. Aug 12th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

‘ஜப்தி’ செய்யப்பட்ட சென்னை ஆல்பர்ட் தியேட்டர்!

சொத்துவரி மற்றும்கேளிக்கை வரி செலுத்தாத காரணத்தால், சென்னை எழும்பூரில் உள்ள பிரபல தியேட்டரான ஆல்பர்ட் தியேட்டருக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஜப்தி செய்வதாக அறிவித்து தியேட்டருக்கு சீல் வைத்துள்ளனர்.

ஆல்பர்ட் தியேட்டர் நிர்வாகம், சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரியாக,51,27,252 ரூபாய் செலுத்த வேண்டியது உள்ளதாகவும், தியேட்டரின் கேளிக்கை வரி ரூ.14 லட்சம் கட்ட வேண்டியது உள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சொத்து வரி மற்றும் கேளிக்கை வரி கட்ட தியேட்டர் நிர்வாகத்துக்கு பலமுறை அறிவுறுத்தியும், நோட்டீஸ் அனுப்பியும், தியேட்டர் நிர்வாகம் வரியை கட்டாததால், தியேட்டர் ஜப்தி செய்யப்படுவதாக மாநகராட்சி அறிவித்து, சீல் வைத்துள்ளது.