• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

சினேகா யோகி பாபு கூட்டணியில் ‘ஷாட் பூட் த்ரீ’’

Byமதி

Oct 23, 2021

பிரசன்னா-சினேகா நடித்த ’அச்சமுண்டு அச்சமுண்டு’ அர்ஜுன் நடிப்பில் ’நிபுணன்’, உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், விஜய் சேதுபதியின் ’சீதக்காதி’ படத்தின் இணை தயாரிப்பாளருமானவர் அருண் வைத்தியநாதன்.

இவர் தற்போது சினேகா, வெங்கட் பிரபு மற்றும் யோகி பாபுவை வைத்து ‘ஷாட் பூட் த்ரீ’ என்ற படத்தை இயக்கிய வருகிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் பூவையார், பிரபல பாடகி பிரணிதி, நடனக் கலைஞர் கைலாஷ் ஹீத் ஆகியோர் நடிக்கின்றனர். நான்கு குழந்தைகளை சுற்றிய கதையான ஷாட் பூட் த்ரீ-யின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறை கொண்டாட்டமாக இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.