அரைஸ் & சைன்ஸ் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது.
உதகை எட்டின்ஸ் சாலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரைஸ் & சைன்ஸ் அறக்கட்டளை இயங்கி வருகிறது.இந்த அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறக்கட்டளையின் தலைவர் முனைவர் ஜாம்பவான் ஜெரால்டு செய்து வருகிறார். குறிப்பாக கொரோனா கால கட்டத்தில் ஊரடங்கு அமலில் இருந்த சமயத்தில் ஏழை, எளிய மக்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.இந்நிலையில் அரைஸ் & சைன்ஸ் அறக்கட்டளை அலுவலகத்தில் ஏழை, எளிய மக்கள் சுமார் 100 மக்களுக்கு போர்வைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று வெகுசிறப்பாக நடைப்பெற்றது