• Sat. Apr 20th, 2024

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

Byமதி

Nov 1, 2021

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ தமிழகத்தின் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி,தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *