• Thu. Dec 12th, 2024

நாளை முதல் 7 ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

ByA.Tamilselvan

Sep 3, 2022

தமிழகத்தில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேலும் நாளை முதல் வரும் 7ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் லேசான மழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் தர்மபுரி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (4-ந் தேதி) முதல் 7-ந் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.